Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 01 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களை, இலங்கை ஆசிரியர் சேவையில் 3-II தரத்துக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், எதிர்வரும் 06, 07ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளனவென, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜீ. முத்துபாண்டா அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் அறிவுறுத்தல்களுக்கமைய, தொண்டர் ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களை, இலங்கை அரச சேவை தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக ஆராய்வதற்காக, தொண்டர் ஆசிரியர்களின் தகைமைகளை மதிப்பீடு செய்ய வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பித்துள்ள சகல தொண்டர் ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றியமையை உறுதிப்படுத்தும் பாடசாலை குறிப்பேட்டின் பிரதி, அனுமதிக்கப்பட்ட தினக்குறிப்பு, தவணைக்குறிப்புகள், நேர அட்டவணைகள், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர் தர சான்றிதழ்கள், பட்டம், டிப்ளோமா ஆகிய தகைமைகள் இருப்பின் அதற்கான சான்றிதழ்கள், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் போன்ற ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் போட்டோப் பிரதிகளுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சிக்கு சமுகமளிக்குமாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்காரணத்தைக் கொண்டும் இதற்காக வேறு ஒரு தினம் வழங்கப்படமாட்டாது. பொருத்தமான ஆவணங்கள் மூலம் தங்களது சேவையை உறுதிப்படுத்த வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
7 hours ago
10 May 2025