2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தொற்று நீக்கி விசிறும் நிகழ்வு இன்று

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

 கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினரால் தொற்று நீக்கி விசிறும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு சுய தனிமைப் படுத்தல் முடிவடையும் காலத்துக்கு முன்னர்

காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்த காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இவர் கொழும்பிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து விட்டு

நாட்டின் ஏற்பட்ட கொவிட்-19  வைரஸ் பிரச்சினை காரணமாக சொந்த இடமான வாழைச்சேனை பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார்.

 குறித்த நபர் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்த சமயம் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 இந்த நிலையில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி

டொக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் வாழைச்சேனையில் குறித்த நபரின் இல்லம் அமைந்துள்ள வீதியில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X