2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தொற்றுக்குள்ளான மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு

Princiya Dixci   / 2020 நவம்பர் 03 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான க.பொ.த. உயர்தர மாணவி, பரீட்சை எழுத இன்று (3) விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி வரும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மாணவியொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, ஒக்டோபர் 29ஆம் திகதி கண்டறியப்பட்டது.

ஓட்டமாவடியில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை எழுதி வந்த நிலையிலே, அம்மாணவிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பரீட்சையை, மாணவி சிகிச்சை பெற்று வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்து எழுத பரீட்சை திணைக்களத்தால் விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இதேவேளை, மேற்படி, மாணவியுடன் முன்னதாக பரீட்சை எழுதிய ஏனைய மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .