2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தொலைபேசி ஊடாக மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் முடிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டின் பல அரச  நிறுவனங்கள் பொது நடவடிக்கைகளைத் தடை செய்துள்ளதால், இந்த முடிவைத் தான் எடுத்துள்ளதாகவும் வைரஸ் பரவல் காரணமாக மக்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒத்திவைக்கப்படுவது நியாயமில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆளுநர் அலுவலக governorep@gmail.com மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் 026-2222102 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க முடியுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இவை தவிர, அஞ்சல் மூலமும் மக்கள் தங்கள் கோரிக்கைகளையும்  சமர்ப்பிக்க முடிவுமெனவும் இதனால் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு முகவர்களால் மக்கள் தவறாக வழிநடத்துவதையும் தவிர்க்க முடியுமெனவும், ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X