2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்சாலை நிர்மாணத்தைத் தடுக்க உயிரைக் கொடுப்போம்

வா.கிருஸ்ணா   / 2018 ஜூன் 10 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை பகுதியில், குடிநீர் போத்தலிடும் தொழிற்சாலையை அமைப்பதற்கு யார் முயன்றாலும், எவ்வகையிலேனும் அதைத் தடுக்கவுள்ளதாக, பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகள், ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில், நேற்று (09) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்​பொன்றின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சரொருவரின் ஆதரவாளர்களால், இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதாகவும் இதனால், அப்பகுதியிலுள்ள மக்கள், பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்றும் இதன்​போது தெரிவிக்கப்பட்டது.

ஒரு கம்பு வெட்டினால் கைதுசெய்யும் வனத்துறையினர், பெரியளவிலான காடுகளை வெட்டி, தொழிற்சாலை அமைப்பதற்கு ஏன் அனுமதி வழங்கினார்கள் என்றும் இதன்போது அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அரசாங்கத்திலுள்ள அனைத்துத் திணைக்களங்களும், இந்தத் தொழிற்சாலை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்கியுள்ளன என்றும், எனினும் அந்த அனுமதி, எதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது என்பதும் தெளிவில்லாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X