2025 மே 09, வெள்ளிக்கிழமை

தொழுநோயின் தாக்கம் தொடர்பில் ஆராய குழு நியமனம்

வா.கிருஸ்ணா   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துவருவது தொடர்பில் ஆராயும் வகையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களுமாக ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மண்முனை வடக்கு பிரதேசத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அண்மைக்காலமாக தொழுநோயின் தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவருவதாகவும் இதுவொரு தொற்று நோய் எனவும் ஆனால், சிலர் இதனை மறைக்கமுற்படுவதாகவும் சுகாதாரப் பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கையில் அதிகளவான தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவ்வாண்டு நாவற்குடா, நாவற்குடா தெற்கு, மஞ்சந்தொடுவாய் பகுதியிலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் மக்கள் போதிய அக்கறை காட்டவில்லையெனவும் இதற்கு ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமைக்கமைய, சுகாதாரத் துறையினர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X