Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி கிழக்கு பகுதியில், குளம் அமைத்து காத்தான்குடி வெள்ள நீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளமையைக் கண்டித்தும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய குளத்தை அகற்றி தோனாக்கால்வாயை திறந்து விடுமாறு வலியுறுத்தியும், ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று, இன்று(6) இடம்பெற்றது.
ஜும்ஆத் தொழுகைக்;குப்பின்னர் ஒன்று திரண்ட பொதுமக்கள், ஆர்ப்பாட்ட பேரணியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர,; காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பேரணியின் இறுதியில,; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜர் ஒன்றை, காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ஜாயிதா ஜலால்தீனிடம,; காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கையளித்தார்.
சீரற்ற கால நிலையால் 5,000க்கு மேற்பட்ட குடும்பங்கள் காத்தான்குடியில் பாதிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
வெள்ள அனர்ததத்தால் காத்தான்குடி புதிய காத்தான்குடி பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஆரையம்பதி பிரதேசமும் வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி கிழக்கு பகுதியில், தனியாருக்;குச் சொந்தமான காணியில் குளம் அமைத்து காத்தான்குடி வெள்ள நீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளனர்.
இதனை திறந்து விடுவதன் மூலம் காத்தான்குடி மற்;றும் ஆரையம்பதி பிரதேசங்களின் வெள்ள நீர் வடிந்தோடும்
இதனை நாங்கள் வலியுறுத்துவதுடன் மேற்படி குளத்தை அகற்றி அந்த தோணா வாய்க்காலினூடாக வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய வேண்டும் என்று காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், ஆர்ப்பாட்ட பேரணியின் போது கருத்து தெரிவித்தார்.
'தோணாவாய்;க்காலினனூடாகவே வெள்ள நீர் வடிந்தோடுவது வழக்கமாகும். தனியாருக்குச் சொந்தமான கிட நிலத்தை தோண்டி குளமாக்கியுள்ளதால், காத்தான்குடி, ஆரையம்பதி பகுதியில் உள்ள மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர், காத்தான்குடி பிரதேச செயலாளர், பாதுகாப்பு பிரிவினர் போன்ற அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனவும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே, இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்த வேண்டி ஏற்பட்டதாகவும் தவிசாளர் அஸ்பர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டோர், குளத்தை அகற்றி, வெள்ள நீரை வடிந்தோடச் செய்து, பொது மக்களை பாதுகாக்;குமாறு கோசங்களை எழுப்பி சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .