Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
படித்து பட்டம் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டும் என்று ஏட்டிக்கு போட்டியாக மதங்களை தொடர்புபடுத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதன் பயனாக இன்று மட்டக்களப்பு மாவட்டம் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான சீனித்தம்பி யோகேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நோக்கத்தை ஒன்றிணைந்த இலங்கைக்குள் நியாயமான முறையில் நிரந்தரமான தீர்வை உரிமையோடு பெறுவதற்கான இராஜதந்திரமான நடவடிக்கையில் எமது தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டு வருகின்றார்.
இதற்காகவே சில விட்டுக் கொடுப்புக்களை அண்மைக் காலமாக எமது தமிழ்த் தலைமைகள் மேற்கொண்டு வருகிறனர்.எமது சேவையில் குறைகள் இருந்தாலும் அதனை நிறையாக ஏற்று தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத்தை வெற்றியடையச் செய்வதோடு தலைமைப்பீடம் மேற்கொள்கின்ற தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றார்.
மேலும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் முழு மனதோடு தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருந்தால் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்க முடியும்.
அதனை விடுத்து முன்னைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.புதிய படித்த பட்டம் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டும் என்று ஏட்டிக்கு போட்டியாக மதங்களை தொடர்புபடுத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதன் பயனாக இன்று மட்டக்களப்பு மாவட்டம் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது.
இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளே இதனை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
5 hours ago
6 hours ago
9 hours ago