Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி வவுணதீவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அண்மையில் பாலியல் துஷ்;பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா மற்றும் வித்தியாவின் சூத்திரதாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
'சட்டத்தரணிகளே மனிதம்; மௌனித்து விட்டதா', 'நேற்று வித்தியா இன்று சேயா நாளை யார்', 'அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கின்றோம்', 'வித்தியா, சேயாவுக்கு நீதி வேண்டும்' என எழுதப்பட்ட வாசக அட்டைகளையும் ஆர்ப்பாட்டப் பேரணியில்; ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
வாழ்வகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு பிரதேச செயலகம்வரை சென்றதுடன், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago