Thipaan / 2016 நவம்பர் 20 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை நீரோடையில், நீராடிக்கொண்டிருந்த 16 வயதான மாணவனொருவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான் என, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பூநொச்சிமுனையிலுள்ள ஸாறா எனப்படும் இந்த நீரோடையில், சனிக்கிழமை (19) மாலை ஏழு மாணவர்கள் நீராடியுள்ளனர்.
இதில், புதிய காத்தான்குடி றிஸ்வி நகரைச் சேர்ந்த எம்.பாஹீம் (வயது 16) எனும் இம்மாணவன் நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து, இவர் மீட்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளான் என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனை இடம்பெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.
52 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
21 Dec 2025