Suganthini Ratnam / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
உலகில் நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 5.1 மில்லியன் பேர் உயிரிழப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பு நோய் நிபுணர் வைத்திய கலாநிதி தர்சினி கருப்பையாப்பிள்ளை தெரிவித்தார்.
ஆறு நிமிடங்களுக்கு ஒருவர் நீரிழிவு நோயினால் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச நீரிழிவு நோய் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பு நோய் நிபுணர் வைத்திய கலாநிதி தர்சினி கருப்பையாப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிரேஸ் நவரட்னராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையின் பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறிருக்க, சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றன.
நீரிழிவு நோயின் தாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து மக்களை விழிப்பூட்டும் ஊர்வலம் நடைபெற்றது.
இதன்போது நடமாடும் நீரிழிவு விசேட இரத்த பரீசோதனையும் நிகழ்த்தப்பட்டது.இரத்த பரீசோதனையில் நீரழிவு நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேநேரம் சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் நடாத்தப்பட்டதாக களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன்; தெரிவித்தார்.
நீரிழிவு நோய் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தில் நீரிழிவின் தாக்கத்தினை கட்டுபடுத்தமுடியும் எனவும் அவர் நம்பிக்கைவெளியிட்டார்.


5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025