Niroshini / 2017 மே 13 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் - ஆறுமுகத்தான் குடியிருப்பு ஹிதாயத் நகர பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு, நீர் வசதி செய்து கொடுக்குமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.
அப்பகுதி மக்களின் பிரச்சினைகள், தேவைகளைப்பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முதலமைச்சர் அங்கு சென்றிருந்தபோதே, அப்பகுதித் தமிழ் மக்கள் தமக்கு நீர் வசதியளிக்குமாறு கேட்டிருந்தனர்.
மேலும், அப்பிரதேச மக்களின் பொதுவான மற்றும் தனிப்பட்ட தேவைகள் பற்றி முதலமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டன.
இதையடுத்து, உரியவர்களை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு அங்கு உடனே வரவழைத்த முதலமைச்சர், தேவையான குழாய்க் கிணறுகளை அவசரமாக தயார் செய்து கொடுக்குமாறு பணித்தார்.
17 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
23 minute ago