2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்குமாறு மட்டு. ரயில் கடவைப் பாதுகாவலாளிகள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன்,கனகராசா -சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தங்களை அரசாங்கச் சேவையில் நிரந்தரமாக்கக் கோரி மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக  மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவைப்  பாதுகாவலாளிகள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (19) காலை  ஈடுபட்டனர்.

பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக ஆறு மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ரயில் கடவைப் பாதுகாவலாளிகளாக நியமனங்களைப் பெற்றுக்கொண்ட தாங்கள், கடந்த நான்கு வருடங்களாக இந்தத் துறையில் கடமையாற்றி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை  எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

மாதாந்தம் 7,500 ரூபாய் சம்பளமே தங்களுக்கு வழங்கப்படுவதுடன், 30 நாட்கள் வேலைக்கு சென்றால் மட்டுமே இந்தச் சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள்,  இந்தச் சம்பளத்தை வைத்தே தங்களது குடும்பங்களின்; வாழ்க்கைச் செலவை ஈடுசெய்வதாகவும் கூறினர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தாங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் போதிலும்,  தங்களின் நிலைமை தொடர்பில் மாவட்ட அரசியல்வாதிகள் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கமாவது தங்களது நிலைமையை உணர்ந்து தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .