2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நெற்பயிர்கள் கருகுவதால் மழை வேண்டித் தொழுகை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும்; இம்முறை பருவமழை குறைவாகக் கிடைத்த நிலையிலும் வரட்சி காரணமாகவும் நெற்பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தில் பதுளை வீதியை அண்டிய வயல்வெளியில் செவ்வாய்க்கிழமை (06) மழை வேண்டி விவசாயிகளும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் தொழுகையில் ஈடுபட்டார்கள்.

இலுப்படிச்சேனை, வெப்பவெட்டுவான், கொம்பர்சேனை, பண்டாரியாக்கட்டுப்பகுதி விவசாயிகளே தொழுகையில் ஈடுபட்டார்கள்.

இத்தொழுகையில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,  விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்

உறுகாமம் குளத்து வாய்க்கால்கள் மூலமாக வயல்களுக்கு நீர் பாய்ச்சக்கூடிய வசதி முன்னர் இருந்தபோதும், தற்போது அந்த வாய்க்கால்கள் தூர்ந்துபோய் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் நீரைப் பெற முடியாதிருப்பதாக விவசாயிகள் கூறினர்.

நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களுடன் தொடர்புகொண்டு இப்பிரச்சினையைத் தீர்க்குமாறு மாகாணசபை உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X