2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நகரை சுத்திகரிக்கும் செயற்திட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் நகரை சுத்திகரிக்கும் செயற்திட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக,மட்டக்களப்பு,ஏறாவூர் நகரசபைப் பிரிவில் வடிகான்கள், தோணாக்கள், பாலங்கள் என்பன சுத்திகரிக்கும் செயற்திட்டத்தின் கீழ்  தோணா துப்புரவாக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

ஏறாவூர் நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் அப்துல் அஸீஸ் மற்றும் முதலமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X