Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'இயற்கையுடன் விவசாயம், தீங்கற்ற எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வேள்ட்விஷன் வாகரைத் திட்டம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையூடாக வம்மிவட்டவான் மைதானம் வரை சென்று விழிப்பூட்டல் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவுற்றது.
நடைபவனியின்போது நஞ்சற்ற உணவு உற்பத்தியை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோடு அவை பயணிகளுக்கு விநியோகமும் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில்; பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.லிங்கேஸ்வரராஜா, வேள்ட்விஷன்; நிறுவனத்தின் வாகரைக் கிளை முகாமையாளர் பொனிஜஸ்டின் வின்சன்ட், திட்ட இணைப்பாளர் ஜி.சுரேஸ், வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி அனுஷ சனத் பியதாஸ, பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கிராம சேவகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அநேகம் பேர் கலந்து கொண்டனர்.


8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago