2025 மே 01, வியாழக்கிழமை

நன்நீர் மீன் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி, க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் நன்நீர் மீன் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்படுவதாக, மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார். 

இதன்படி, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு, மாவட்டச் செயலாளர்  தலைமையில் இன்று (02) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டச் செயலகத்தில் இயங்கிவருகின்ற மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தினுடாக, உலக உணவு அமைப்பின் நிதியுதவியுடன், இத்திட்டம் அமுலாகிறது.

முதற்கட்டமாக அடச்சகல் குளத்தில் 60,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இக்குளத்தில் தற்போது 36 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரமாக முழுநேர மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், கண்டியனாறு குளம், கொக்கன்சேனைக் குளம், நல்லதண்ணீர் ஓடைக்குளம், இரும்பன்ட குளம், அடச்சகல்குளம் ஆகிய பருவகால குளங்களுக்கு கிட்டத்தட்ட 550,000 மீன்குஞ்சுகள் விடப்படவுள்ளதாக மாவட்ட நீர் உயிரின வளப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜெகப் நெல்சன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .