2025 மே 09, வெள்ளிக்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா

Princiya Dixci   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரியுதாஜித்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி,  நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய அனுஷ்டானங்களும் மர நடுகை நிகழ்வுகளும் நாளை வெள்ளிக்கிழமை (08) இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயம், மங்களராமய விகாரை, ஜம்முல் ஜீம்மா பள்ளிவாசல் மற்றும் புனித மரியாள் பேராலயம் ஆகியவற்றில் நாளை காலை விசேட சமய வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், கோட்டைப் பூங்கா மற்றும் மாவட்ட செயலக வளாகம் ஆகியவற்றில் மர நடுகையும் இடம்பெறவுள்ளது. இவற்றில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாகவும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகவும் இது போன்ற நிகழ்வுகள் ஏஙற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X