2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கப் பொறிமுறைக்கு கருத்தறியும் அமர்வு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.  

முதலாவது அமர்வு, வாழைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறும்.

இரண்டாவது அமர்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறும்.

மூன்றாவது அமர்வு, மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் எதிர்வரும்  சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறும்.

இறுதி அமர்வு மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல்  மாலை 4.30 மணிவரை  நடைபெறுமென நல்லிணக்கத்துக்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணிக்குழு தெரிவித்தது.

இந்த அமர்வு தொடர்பான மேலதிக விவரங்களை செயலணிக்குழுவின் 0114232857 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக தொடர்புகொண்டு பொதுமக்கள் அறிய முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப் பொறிமுறைக்கு கருத்துகளைப் பகிரும் விடயத்தில் அக்கறை காட்டுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தக் கருத்தறியும் பொறிமுறை வடிவமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமென்று செயலணி அறிவித்துள்ளது.
சட்டத்துறை நிபுணரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பலவற்றின் முன்னாள் ஆணையாளருமான மனோரி முத்தட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட செயலணி இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களின் கருத்தறியும் அமர்வுகளை நாடெங்கிலும் நடாத்தி வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X