Princiya Dixci / 2016 நவம்பர் 26 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் பாக்கியநாதன்
'கடந்த 30 வருட கால யுத்தம் ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலமையை ஏற்படுத்தியிருந்தது. இவற்றை உடைத்தெறியும் முற்பொக்கு சிந்தனையோடு வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சமூகங்களுக்கிடையே நல்லிணக்த்தை ஏற்படுத்தும் பாரிய பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுஙக செயல்படுகின்றார்' என, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
மாணவர்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய நல்லிணக்க சகோதர பாடசாலைகளின் சங்கமம், இன்று சனிக்கிழமை (26) சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் ஆரம்பமானது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலின் கீழ் நடைபெறும் 5 நாட்கள் கொண்ட வதிவிட சங்கமத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அவர் மேலும் கூறுகையில்,
'நல்லாட்சி ஏற்பட்டுள்ள காலத்தில் இனங்களிடையே நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டியது கல்வியின் முக்கித்துவமாகும். ஒற்றுமையான இருப்பதற்கு மொழி ஒரு ஊடகமாக உள்ளது. மொழி தெரிந்தால் 90 வீதமான பிரச்சினைகள் இல்லாமல் போய்விடும்.
'சிறுபான்மையினர், சிங்கள மொழி தெரியாமலும் பெரும்பான்மையினர், தமிழ் மொழி தெரியாமலும் ஒருவருக்கொருவர் முகங்கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டள்ளது. இதைத் தவிர்க்க, மாணவர்கள், கல்வியின் முலம் இருமொழிகளைக் கற்று இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
'கடந்த காலங்களில் தமிழ், சிங்கள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எனப் பிரித்தபோது தான் இனங்களிடையே நல்லிணக்கம் சீர் குலைந்தது. அதை நிவர்த்தி செய்வதற்கு சந்திரிகா, விட்ட இடத்திலிருந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
'இன்னும் சில ஆண்டுகளின் பின்னர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள் என்று இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்வதன்; முக்கியத்துவம் புரிந்துள்ளது.
'ஒருவருக்கு வைத்தியசாலையில் இரத்தம் தேவைப்படும்போது, பாய்ச்சப்படும் இரத்தமானது, இனங்களைக் கொண்டு வேறுபடுத்தப்படவில்லை. மாறாக இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த எல்லோருக்கும் பொருந்துமாப்போல் உள்ள குருதியின் அமைப்பை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்;' என்றார்.
இவ் ஆரம்ப நிகழ்வில் தென்மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து 100 மாணவர்களும் 20 ஆசிரியர்களும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 100 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025