Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தெரிவு செய்யப்பட்ட இரண்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு, தலா ஒவ்வொரு நல்லின காளைமாடுகளை விலைக் கழிவுடன் நேற்று சனிக்கிழமை (24) வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.
தும்பங்கேணி பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்தின் உதவியுடன் 30,000 ரூபாய் பெறுமதியான ஒருகாளை 20,000 ரூபாய் விலைக்கழிவுடன், 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டன.
இப்பிரதேசத்தில் நல்லினப் கறவைப் பசுக்களை இனவிருத்தி செய்யும் நோக்குடனும் கால்நடைப் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் இக்காளை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் தும்பங்கேணி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.ருஷியந்தன், மற்றும் போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago