எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதான வீதியில் புதிய நவீன நீர்க் குழாய்களை பொருத்தும் நடவடிக்கையை, தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது.
இந்த வீதியில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த நீர்க் குழாய்களுக்கு மேலால் வடிகாண்கள் இருப்பதால் புதிய குடி நீர் இணைப்புகளை காத்தான்குடியில் வழங்குவதில் பல்வேறு அசௌகரியங்களை தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை எதிர் நோக்கி வருகின்றது.
இதனால், நகரத் திட்டமிடல் தேசிய நீர்வழங்கள் வடிகாமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்பின் பேரில், 10.2 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், புதிய நவீன நீர்க் குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
வாகனப் போக்குவரத்துக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலில்லாமல், இரவு வேளையில் இந்த நீர்க்குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் வேலை மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.மதீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .