Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்றப் பட்டதாரிகளை, கிழக்கு மாகாண ஆளுனர் தொடர்ச்சியாக புறக்கணித்துவருவதாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமது நியமனத்தை வலியுறுத்தி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று(05) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று(05) காலை நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொள்ளயிருந்தார்.
இந்நிலையில் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய வேலையற்றப் பட்டதாரிகள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும் குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துக்கொள்ளாத நிலையில், கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியப்பின் பட்டதாரிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
கிழக்கு மாகாண ஆளுனரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்க பல தடவைகள் முனைந்தபோதும், அவர் தங்களை புறக்கணித்ததாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணசபையில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தும் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தும் தமக்கு ஏன் நியமனம் வழங்கப்படவில்லை என பட்டதாரிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
அரசே நியமனம் வழங்கு, இதுதான் நல்லாட்சியா, ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் 40புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்கு, எமது கண்ணீருக்கு பதில் வழங்கு, ஒரே மாகாணத்தில் வெவ்வேறு வெட்டுப்புள்ளி எதற்கு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
2 hours ago
4 hours ago