Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் சுகாதார தொண்டர்கள், இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வருடங்களாக ஏமாற்றப்பட்டு வரும் கிழக்கு மாகாண வேலையற்ற பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கையைத் தெரிவிக்கையில்,
“கடந்த 1998ஆம் ஆண்டு முதல் யுத்த காலத்திலும் இயற்கை அனர்த்தங்களின் போதும் நாம் சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றியுள்ளோம்.
“எமக்கு கிழக்கு மாகாண சபையால் நியமனம் தருவதாகக் கூறப்பட்டது. அதற்கான நேர்முகப்பரீட்சைக்கும் நாம் தோற்றினோம். ஆனால், இதுவரையில் எமக்கு நியமனம் தரப்படவில்லை.
“எனவே, வறுமையில் இருக்கின்ற எங்களுக்கு எங்களது கடந்த கால சேவையை கருத்திற்கொண்டு, எமக்கான நியமனத்தை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்” என்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
36 minute ago
41 minute ago