2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 16 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சிபெற்றுவரும் ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று (16) ஒன்றுகூடிய ஆசிரிய உதவியாளர்கள், இந்த கோரிக்கையை, அரசாங்கத்துக்கு முன்வைத்தனர்.

கோப்பாய், கொட்டகலை, அட்டாளைச்சேனை , காலி உணவட்டவன ஆகிய அரசினர் ஆசிரியர் கலாசாலைகளில் ஆசிரியர் உதவியாளராகக் கடமையாற்றும் ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய உதவியாளர்கள் ஆகியோர், இந்தக் கோரிக்கைகளை விடுத்தனர்.

2015 .05.19 ஆம் திகதி முதல் உதவி ஆசிரியளர்களாக முதல் நியமனம் வழங்கப்பட்டு, தொடர்ந்தும் ஆசிரிய உதவியாளர்களாகக் கடமையாற்றுவது தமக்கு பெரும் மன உளைச்சலை தருவதாக, ஆசிரியர் உதவியாளர்கள் தெரிவித்தனர்.

தமது கோரிக்கையை முன்வைத்து 3,000 கடிதங்களை, ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமக்கான கொடுப்பனவாக 10,000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் இன்றைய வாழ்க்கைசெலவைக் கொண்டுநடத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும் எனவே, தரம் 2, தரம் 3வரையான வகுப்புகளுக்குத் தங்களை ஆசிரியர்களாக உள்வாங்கவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாடசாலைகளில் ஒரு ஆசிரியர் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் தாங்கள் மேற்கொள்ளும் நிலையில், தாங்கள் ஆசிரிய உதவியாளர்கள் என்ற நாமத்துடனேயே செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தமக்கான நிரந்தர தீர்வைப் பெற்று தர இந்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X