Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில், மாகாண சபை ஆட்சி நிறைவடைந்திருக்கின்ற நிலையில், நிர்வாக ரீதியாக அங்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்படாவிட்டால், அது மாணவர்களின் கல்வியையே பாதிக்குமென, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தின வருடாந்த பரிசளிப்பு விழாவும் அமிர்தசுரபி நூல் வெளியீடும், இன்று (08) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், “ஐந்தாம் தர புலமைப்பரீசைப் பெறுபேறுகளின்படி, மிகவும் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், மிகவும் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.
“பாடசாலையில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் பின்தள்ளிவிட்டு, மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டியிருக்கின்றார்கள். அதனை நான் வரவேற்கிறேன்” என்றார்.
மேலும், இலங்கையில் இருக்கின்ற அனைத்துப் பாடசாலைகளின் தரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான், கல்வியமைச்சின் மூலமாக “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பாடசாலைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, பரிசில்களையும் இராஜாங்க அமைச்சர் வழங்கிவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
38 minute ago
43 minute ago