2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: ‘விழிப்புடன் இருக்கவும்’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு, சமூக வலைத்தளங்கள் மூலமாக தனிநபர்கள் நிவாரணப் பொருள்களைக் கோரி வருவது தொடர்பில் பொதுமக்கள் சற்று விழிப்பாக இருக்குமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில், மாவட்டச் செயலாளர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“தனிநபர்கள், வெளிநாட்டில் வசிக்கின்ற புலம்பெயர் மக்களிடமிருந்தும் ஏனைய பொதுமக்களிடம் இருந்தும் நிவாரணப் பொருள்களை வழங்குமாறு கோருவது முற்றிலும் தவரான ஒரு செயற்பாடாகவே  அவதானிக்கப்படுகின்றது.

“இவ்வாறு சேகரிக்கப்படும் பொருள்கள், பணம், ஏனையவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்ததாக இதுவரை எங்கும் பதிவாகவில்லை. மாவட்டச் செயலகத்தினூடாக, தேசிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவு துரிதமாக செயற்பட்டு, பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணப் பொருள்களை பகிர்ந்தளிக்கின்ற வேலைத்திட்டம் கிரமமான முறையில் ஒழுங்கமைப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

“அந்தவகையிலே, இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரு வாரங்களாக சமைத்த உணவுகளும் நண்பர்கள் உறவினர் வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான  உலர் உணவு பொருள்களையும் வழங்கி வருவதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது” என்றார்.

இச் செயற்பாட்டை குழப்புகின்ற அடிப்படையிலே இவ்வாராண சமூக வலைதளங்கள், ஊடகங்களூடாக பொதுமக்களிடம் நிதி கோருவது தொடர்பில் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X