Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 28 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒதுக்குப் புறக் கிராமமான ஓமடியாமடுவில் வசிக்கும் மக்களுக்கு உலருணவு நிவாரணப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் எஸ். கரன் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவிக்கான நிதியத்தின் நிதி அனுசரணையுடன், விவேகானந்த சமுதாய நிறுவனம், இந்த உலருணவுப் பொதிகளை வழங்கியிருந்தது.
கிராம மக்களிடம் நிவாரணப் பொருள்களை கையளிக்கும் நிகழ்வு, வாகரை பிரதேச செயலாளர் எஸ். கரன் தலைமையில், ஓமடியாம்மடு கிராம சனசமூக மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.
பிரதேச செயலகத் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. சுதாகரன், விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ், தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன், பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொன்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .