2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘நீங்கள் என்ன செய்ய வேண்டும்’ விழிப்புணர்வு ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பிரசாரம், ஏறாவூர் நகரில் இன்று (04) முன்னெடுக்கப்பட்டதாக, ஸ்ரீ லங்கா 'ஷெட்' நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் முன்னெடுப்புகளில் பொதுமக்களின் முழுமையான விழிப்புணர்வும் பங்குபற்றலும் மிக அவசியம் என்பதால் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, மார்ச் 12 ஜனநாயக விழிப்புணர்வு இயக்கத்தால் வெளியிடப்பட்ட 'புதிய உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்', “சிந்தியுங்கள், அணிசேருங்கள், செயற்படுங்கள்” என்ற கையேடுகளும் இங்கு விநியோகிக்கப்பட்டன.

அந்தக் கையேடுகளில், “கட்சிக்காரராக அல்லாமல் நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் சிந்தியுங்கள்”, “நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகச் செயற்படுங்கள்”, “கட்சி பேதமின்றி உங்கள் பிரதேசத்திற்குத் தகுதியானவர்களை மட்டும் நியமித்துக் கொள்ள செயற்படுங்கள்”, “பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதை சாதகமாக்கிக் கொள்ள திறமையான மற்றும் ஆர்வமுள்ள பெண்களைப் பட்டியலில் உள்ளடக்குமாறு தலைமைத்துவத்தை வலியுறுத்துங்கள்”, “ஊழல் பேர்வழிகளை எதிர்த்து நில்லுங்கள்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த விழிப்புபணர்வுப் பிரசாரம், ஏறாவூர் நகரில் முதன் முதலாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸிடம் கையளிக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X