Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 29 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்த்தலத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அச்சுறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அத்துமீறு உள் நுழைந்து, மேலதிக நீதவானுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா பிணையில் விடுதலை செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மனைவி வேறொரு பெண்ணுடன் மேலதிக நீதவானின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்திற்கு சென்று தகறாரில் ஈடுபட்ட நிலையில் குறித்த இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் நேற்று (28) ஆஜர் செய்த போது, இது தொடர்பாக சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கும் வரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago