Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கருகிலுள்ள குளத்தில், மீன் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (27) காலை நீரில் மூழ்கி காணமல் போன நிலையில், இன்று மாலை 02.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் ஓட்டமாவடி - கேணிநகர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான முஸ்தபா லெப்பை ரிப்கான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகரை, புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள கேணிமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக இன்று காலை 09 மணியளவில் தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இதன்போது 10 மணியளவில அப்பகுதிக்கு வந்த மீனவர் ஒருவர், குளத்தில் ஒருவர் மூழ்குவதையும், அவர் காப்பாற்றுமாறு சைகை காட்டியதை அடுத்து அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்தப்போதும் காப்பற்றமுடியாமல் போன நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .