Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 09 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்
இவ்வாண்டில், உலகில் 429 மில்லியன் பேர் நீரிழிவுப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் 2045ஆம் ஆண்டில் உலகில் 90 சதவீதமானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டிய கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் எம்.அருளானந்தம், “நீரிழிவு ஒரு நோயல்ல; சமூகப் பிரச்சினை” என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தலைமையில் நேற்று (08) நடைபெற்ற நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “5 செக்கனுக்கு ஒருவர், நீரிழிவால் பாதிக்கப்படுகிறார். 10 செக்கனுக்கு ஒருவர் மரணமடைகிறார். 30 செக்கனுக்கு ஒருவர் கால், கை இழக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
உடற்பயிற்சி, உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றால், நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
“நமது உணவு நடைமுறைகள் மாற்றம் பெற்றுவிட்டன. அவற்றை மாற்றம் செய்ய வேண்டும். கலாசாரம், அதன் நடைமுறைகள் எல்லாம், உடல் திறன் மேம்பாடுகள் சுகாதார நடைமுறைகளுடனே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
“சுகாதாரக் கல்விக்கும் சுகாதார மேம்பாட்டு விழிப்புணர்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. அரச அதிகாரிகள் எல்லோரும் இணைந்ததாக, மக்களுக்கு நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்கல் இதில் முக்கியமானதாகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விழிப்புணர்வுக் கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025