2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நூற்றுக்கும் மேற்பட்ட வீதிகள் புனரைமைப்புக்கென காத்திருக்கின்றன

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 நவம்பர் 15 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உள் வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீதிகள் பல மணல் வீதியாகவும் களிமண் வீதியாகவும் காணப்படுவதால், போக்குவரத்து செய்வது பெரும் சிரமமாக உள்ளது.

பழம்பெரும் கிராமமாகத் திகழும் களுவாஞ்சிகுடி கிராமத்திலுள்ள வீதிகள், நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ளதாக, களுவாஞ்சிகுடி பொதுமக்களும் கிராமத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

உள் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பாரியதொரு சுகாதாரப் பிரச்சினை நிலவுகின்றது. எனவே, மழைநீர் வழிந்து செல்லக்கூடிய வடிகாண்களுடன் கூடியவாறு, உள் வீதிகளைப் புனரமைப்புச் செய்துதர வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

களுவாஞ்சிகுடி கிராமத்திலுள்ள வீதிகளைத் துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர், களுதாவளை பிரதேசசபைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X