ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியான வானிலை நீடிப்பதையடுத்து, நெத்தலிக் கருவாடு உற்பத்தியில் பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய வானிலை காரணமாக தினமும் அதிகளவிலான நெத்தலி மீன்கள் பிடிபடுவதால் அவற்றை கருவாடாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளில் உள்ளூர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாவலடி, வாகரை, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, களுவாதளை உட்பட பல கரையோரப் பிரதேசங்களில் குறித்த நெத்தலிக் கருவாடு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மொத்த வியாபாரிகளுக்கு ஒரு கிலோகிராம் நெத்திலிக் கருவாட்டை 750 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் நெத்தலி 1,000 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago