2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நேருக்கு நேர் மோதி விபத்து

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியின், புணாணைப் பிரதேசத்தில், நேற்று (25) இரவு, 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்தனர் என்று, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த காரும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும், நேருக்கு நேர் மோதியதாலேயே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைகள் முடிவடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X