Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மனித வரலாற்றில் மிகப்பெரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் சந்திக்கும் மியான்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விடயத்தில் துருக்கி நாட்டின் அக்கறையை உலமா கட்சி பாராட்டுவதுடன், மியான்மார் அதிபர் ஆங் சாங் சுகிக்கு சமாதானத்துக்கான நொபெல் பரிசு இன்னமும் அவரிடம் இருப்பது அப்பரிசுக்கே அவமானம்” என, உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உலமாக்கட்சியின் கல்முனைக் காரியாலயத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அம்முஸ்லிம் மக்களை இந்நிலைக்குக் கொண்டு வர பல திட்டங்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வந்துள்ளன. கல்வியில் அவர்கள் உரிமை மறுக்கப்பட்டனர். அவர்களின் இனத்துவ அடையாளங்கள் இல்லாமலாக்கப்பட்டன. அண்டைய நாடுகளுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டன. இவ்வாறு பல விடயங்கள் அரசாங்கத் தரப்பால் செய்யப்பட்டுள்ளன.
“ரோஹிஞ்சா முஸ்லிம்கள், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஆட்சியாளர்களினாலும் சில பௌத்தவாதிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இராணுவம், அந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய காலம் முதல் இத்துன்பம் தொடர்கிறது.
“அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டால் முஸ்லிம்களுக்கு ஓரளவு பாதிப்புக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ஆங் சாங் சூகி தலைமையில் ஜனநாயக மாற்றம் ஏற்பட்டும், முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறையவில்லை.
“அம்மக்கள் பற்றி முஸ்லிம் நாடுகளுக்கோ, ஐ.நாக்கோ, அமெரிக்கா கூட்டு நாடுகளுக்கோ அக்கறை இல்லை. ஈராக்குக்குள் புகுந்த அமெரிக்க நேசப்படைகள், லிபியாவுக்குள் புகுந்த படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ ஒழிக்கப் புகுந்த படைகள் அனைத்தும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விடயத்தில் மௌனமாக இருக்கின்றன. காரணம், அம்மக்களிடம் பெற்றோல் இல்லை என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
9 hours ago