2025 மே 17, சனிக்கிழமை

நோயுற்ற மாடுகளை இறைச்சியாக்க கொண்டு சென்றவர்கள் கைது

பேரின்பராஜா சபேஷ்   / 2018 மே 27 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, சித்தாண்டி - சந்தனமடுஆறு பிரதேசத்திலிருந்து, அனுமதிப்பத்திரமின்றி, கப் ரக வாகனமொன்றில் மூன்று மாடுகளை ஏற்றி வந்த இருவர், இன்று (27), ஏறாவூர்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மாடுகளை மீட்ட பொலிஸார், கப் ரக வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மாடுகள் கடத்திச் செல்வது தொடர்பாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசி தகவலையடுத்தே, குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மாடுகள், நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால், சந்தேகநபர்கள் மீது, மிருகவதை குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நோயுற்ற மாடுகள், இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது என்றும் சந்தேகநபர்களை, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .