2025 மே 12, திங்கட்கிழமை

பாடசாலைகளுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டாம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்

பாடசாலைகளுக்கு இடையில் பாகுபாட்டை காட்டும் நிலையை கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியினர் கைவிட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தான் விரும்பியபடி பாடசாலைகளில் பாகுபாடு காட்டி வருகின்றது. சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடமொன்று ஏற்படுகின்ற போது தமக்கு விருப்பமான ஒருவரை அவரது தகைமையை கருத்திற் கொள்ளாது பதில் அதிபராக நியமிக்கும் செயற்பாட்டை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ளது.

இன்னும் சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் போது, முறைப்படி விண்ணப்பம் கோரி அதன் மூலம் நியமனம் வழங்கப்படுகின்றது. ஏன் இந்தப் பாகுபாடு? இப்படி பாகுபாடு காட்டும் சட்டம் நாட்டில் உள்ளதா? நல்லாட்சி என்றால் நேர்மை இருக்க வேண்டுமா?

திருகோணமலை கல்வி வலயத்தில் அண்மையில் சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது, விண்ணப்பம் கோராமலே பதில் அதிபர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்டுள்ள போது அதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கல்வி என்பது புனிதமானது. அது எல்லோருக்கும் அறிவு ஒளியைத் தருவது. எனவே, பாடசாலை நிர்வாகத்தில் இனரீதியான பாகுபாடு காட்டப்படக்கூடாது. விண்ணப்பம் கோருவதென்;றால் எல்லாப் பாடசாலைகளுக்கும் விண்ணப்பம் கோர வேண்டும். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் இந்த விடயங்களில் நேரடியாகத் தலையிட்டு இப்படியான பாகுபாடுகள் இடம்பெறாமல் பார்க்க வேண்டியது மிக அவசியமாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X