Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜி.ஏ.கபூர், வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 122 பாடசாலைகளில் 102 தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு உயர்தரத்திலான மலசலகூட வசதிகளை ஏற்படுத்துவதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி;ப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு முதற்கட்டமாக 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
சுகாதாரம் முன்னோக்கிய பாடசாலை சமுதாயத்தை உருவாக்குவதற்காக சுகாதார வசதிகள் வழங்குகின்ற தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2015ன் கீழ் பாடசாலைகளில் சுத்திகரிப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதோடு, சகல பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் தெரிவுசெய்து உயர்தரத்திலான மலசலகூட வசதிகளை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தேசிய பாடசாலைகள் மற்றும் 1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாகாணப் பாடசாலைகள் ஆகியவற்றில் செயற்படுத்தப்படவுள்ள இத் திட்டத்திற்கு 20 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படுகின்றது.
நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.சசீந்திர சிவகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ரி.எஸ்.பீரிஸ், திருமதி எஸ்.ஜோன்ஸன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago