Niroshini / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் நிலவுகின்ற குறைபாடுகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என பட்டடிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் கல்வி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி ஊடகங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பாடசாலைகளில் கட்டட குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாமல் இருந்துவந்த நிலையில், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளின் அபிவிருத்திப்பணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் முன்னுரிமை அழிக்கப்பட்டது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக தேவைப்படும் கட்டட வசதிகள், விளையாட்டு மைதானங்கள் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் கரியவசமுடன் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே உறுதியளிக்கப்பட்டது.
பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் அனைத்தையும் அறிக்கைமூலம் சகல அதிபர்களும் தனக்கு உடன் சமர்ப்பிக்கும் படியும் அத்தோடு வடக்கு கிழக்கு மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலஇவிஞ்ஞானஇகணித பாடங்களுக்கான ஆசிரிய பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago