Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றிஸ்வி நகர் கடற்கரையோரத்தை அண்டிய நீரோடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சடலத்தைக் கண்ட சிலர், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இந்நிலையில், சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த திங்கட்கிழமை (26) காணாமல் போன மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் வசிக்கின்ற எம்.பாத்துமுத்து (வயது 79) என்பவரின் சடலமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பெண் காணாமல் போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025