2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் உதவி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த யுத்தத்தினால் கணவனை இழந்த இரண்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உதவி  திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

மகளிர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இவர்களுக்கு சுயதொழில் உதவியாக தலா 30,000 ரூபாய் படி காசோலைகள்  வழங்கப்பட்டன.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்காகவும்; இவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X