2025 மே 07, புதன்கிழமை

பொது நூலகங்களுக்கு கணினி மற்றும் நூல்கள் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொது நூலகங்களுக்கு கணினி மற்றும் நூல்கள் என்பன இன்று புதன்கிழமை (18) காலை போரதீவுப்பற்று பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பழுகாமம் பொதுநூலகம் மற்றும் முனைத்தீவு பொதுநூலகம் ஆகியவற்றிற்கு தலா ஒவ்வொரு கணினிகளும் ஏனைய 11 பொது நூலகங்களுக்கு நீதிக்கதைகள், பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான உசாத்துணை நூல்கள் வழங்கிவைக்கப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.கருணாநிதி தெரிவித்தார்.

இதில்,போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சன சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.கருணாநிதி மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X