Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைவஸ்து, புகைத்தல், மதுபானப் பாவனைக்கு அடிமையானோரினுடைய குடும்பங்களின் விவரங்கள் திரட்டப்படுவதாக வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.
கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனையின் பேரில் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம அலுவலகர் பிரிவுகள் ரீதியாக இந்த விவரங்கள் திரட்டப்படுகின்றன.
கிராம மட்டத்தில் கடமை புரியும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் இந்த விவரங்களை திரட்டுகின்றனர்.
போதைவஸ்து, புகைத்தல், மதுபானப் பாவனைக்கு அடிமையானோருக்கு விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்கவும்; அக்குடும்பங்களின் வறுமை நிலைமையைப் போக்கி வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவும் இந்த விவரங்கள் திரட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.
13 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
33 minute ago