2025 மே 12, திங்கட்கிழமை

புதிய பாடசாலை அமைக்கும் பணிகள் மந்தகதியில்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பாடசாலைக் கட்டிடம் இல்லாததன் காரணமாக தற்போது ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் இயங்கும் ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தை புதிய இடத்தில் அமைப்பதற்காக கடந்த வருடம் 08.09.2015 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு அதிகாரிகளால் கட்டிட நிருமாண வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஆனால், ஆறு வகுப்பறைகளைக் கொண்ட அந்தப் புதிய பாடசாலைகளை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஐந்து மாதங்கள் கடந்து விட்ட போதிலும், கட்டடம் அரைகுறையாக காட்சியளிப்பதாக பாடசாலை நிருவாகத்தினரும் மாணவர்களும் பெற்றோரும் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடசாலைக்கு 6,300,000,00 ரூபாய் அரசாங்க நிதியினைக் கொண்டு மூன்று மாடிகளைக் கொண்ட 50'×25' அடி அளவுள்ள ஆறு வகுப்பறைகளை அமைப்பதற்காக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வேலைகள் முடிவுறாத காரணத்தினால் இப்பாடசாலையின் கட்டிட நிருமாண ஒப்பந்தக்காரருக்கு இரண்டு தடவைகளில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை சுமார் 35 சத வீதமான நிருமாணப் பணிகளே நிறைவுற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கால நீடிப்பு எதிர்வரும் 2016.03.26ம் திகதியுடன் முடிவடையவுள்ளது. ஆயினும் இன்னமும் 65 சதவீதமான கட்டிட வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது. இது சாத்தியப்படுமா என்று பெற்றோரும் பாடசாலை நிருவாகத்தினரும் கேள்வி எழுப்புகின்றனர். கல்வி அதிகாரிகள் இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X