Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர், மட்டக்களப்பு, செங்கலடி, மண்முனைப்பற்று, வாகரை ஆகிய பிரதேசங்களில் இயங்கிவந்த மத்தியஸ்த சபைகளின் பதவிக்காலம் கடந்த ஒக்டோபருடன் முடிவடைந்த நிலையில், புதிய மத்தியஸ்த சபை குழாம் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி நடைபெறவுள்ளதாக மத்தியஸ் தசபையின் மட்டக்களப்பு -அம்பாறைப் பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம.ஐ.முஹம்மத் ஆஸாத் தெரிவித்தார்.
மேலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள மூன்றாண்டு பதவிக் காலத்தின் அடிப்படையில் காத்தான்குடி, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய மத்தியஸ்த சபைகள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதியுடன் கலைக்கப்படவுள்ளதாக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்தது.
கலைக்கப்பட்ட மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே கோரப்பட்டிருந்தன.
இவ்வாறிருக்க, செங்கலடி மத்தியஸ்த சபைக்கு புதிய பதில் தலைவராக இதுவரைகாலமும் அதன் உப தலைவராக பணியாற்றிவந்த தங்கேஸ்வரி பஞ்சாட்சரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago