Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமிக்கப்பட்டதும், 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டமைக்கு அமைய கோலாகலமாக நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
கடந்த 8ஆம் திகதி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா மண்டபத்தில் இந்த வருடத்துக்குரிய பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது.
இருப்பினும், இப்;பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதுடன், இப்பட்டமளிப்பு விழாவை பின்னர் நடத்துவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக கடந்த 6ஆம் திகதி அறிவித்திருந்தது.
பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும்போது, சம்பிரதாயப்படி அப்பல்கலைக்கழகத்துக்குரிய வேந்தர் பிரசன்னமாக வேண்டும்.
இப்பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம் கடந்த ஓகஸ்ட் மாதம் முடிவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கான புதிய வேந்தர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
இப்பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமிக்கப்படாமை காரணமாகவே இப்பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டது எனவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசில் இப்பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் ஜனாதிபதியால் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய வேந்தர் நியமிக்கப்பட்டதும், தாமதமின்றி பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago