Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (10) காலை மஞ்சள் கோட்டு கடவையில் சென்ற நபரொருவரை காரில் மோதிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரி.துஸார தெரிவித்தார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த இக்கார் மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சள் கோட்டில் ஒருவரை மோதி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
இதையடுத்து,பொலிஸார் அக்காரை துரத்திச் சென்று வழி மறித்து பரிசோதனை செய்த போது அதன் பின்புறத்திலிருந்து பாரியளவிலான கத்தி, பொல்லுகள், சங்கிலி, தடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்,அக்காரை செலுத்திச்சென்ற சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago