2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புனித உம்றாவுக்கு இலவசமாக அனுப்ப நடவடிக்கை

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,பைஷல் இஸ்மாயில்

ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனம் பள்ளிவாயல்களின் இமாம்கள் மற்றும் முஅத்தீன்களை இலவசமாக உம்றாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

சனிக்கிழமை(27) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நாடு பூராவும் பள்ளிவாயல்களில் இமாம்காளாகவும் முஅத்தீன்களாகவும் கடமையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட இதுவரை புனித மக்காவுக்கு ஹஜ் கடமைக்கோ அல்லது உம்றாவுக்கோ செல்லாதவர்களை புனித உம்றாவுக்கு இலவசமாக அனுப்பும் வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் 500 உலமாக்களை புனித உம்றாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம். சவூதி அரேபியாவின் தனவந்தர்களின் உதவியுடன் இந்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

இதற்காக ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனம் சவூதி அரேபியாவிலுள்ள தனவந்தர்களுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளது.

அந்த அடிப்படையில் மார்ச் மாதம் 25ஆம் திகதி முதல் கட்டமாக தெரிவு செய்யப்படும் பள்ளிவாயல்களின் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் 100 பேரை இலவசமாக புனித உம்றாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இவர்களை தெரிவு செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.

இதற்கான விண்ணப்பம் ஒன்றை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அவர்கள் கடமையாற்றும் பள்ளிவாயல்களின் சிபாரிசுடன் எமக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எதிர்வரும் 6.3.2016 அன்று விண்ணப்பமுடிவுத் திகதியாகும். விண்ணப்பிப்பவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தெரிவு செய்யப்படுபவர்களுக்கான டிக்கட் மற்றும் அதற்கான ஆவணங்களை எதிர்வரும் 22.3.2016 அன்று அவர்களிடம் கையளிப்போம். அவர்கள் மார்ச் 25ஆம் திகதி புனித மக்காவுக்கு உம்றாக்கடமைக்காக புறப்படுவார்கள்.

தெரிவு செய்யப்படும் இமாம்கள் முஅத்தீன்களுக்கான கடவுச்சீட்டு ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மக்காவில் உம்றா காலத்தில் செவளிப்பதற்காக கைச் செலவுக்கான பணம் இவைகளையும் எமது ஹிறா பவுண்டேசன் வழங்கவுள்ளது.

இதற்கான மேலதிக தகவல்களை 065-2055344 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X