Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 142ஆவது கல்லூரி தினத்தையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை(29) காலை பாடசாலையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் மற்று பாடசாலை அபிவிருத்திக்குழு, பாடசாலை சமூகம் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்திவருகின்றனர்.
கத்தோலிக்க மக்களினால் புனித தூதராக கருதப்படும் புனிதர் மிக்கேலின் திருவிழா தினத்தினை புனித மிக்கேல் கல்லூரியும் தனது கல்லூரி தினமாக அனுஸ்டித்துவருகின்றது.
அருட்தந்தை சுலக்ஸன் தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவரும் ஜேசுசபை துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் மற்றும் பாடசாலை அதிபர் வெஸ்லி வாஸ் உட்பட பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது விசேட கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து அனைவருக்கும் நற்கருணை ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புனித மைக்கேல் கல்லூரியின் கல்லூரி கொடி மற்றும் பழைய மாணவர் சங்க கொடி என்பன ஏற்றப்பட்டு கல்லூரியின் ஸ்தாபகரான அருட்தந்தை பேர்டினன்ட் பொணல் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago